search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரிப்பு
    X

    வேலூர் மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரிப்பு

    வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தர்பூசணி, எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. நேற்று 99 டிகிரியை தொட்டது. வெயிலின் தாக்கத்தால் தர்பூசணி, குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் வரவழைக்கப்பட்டு மார்க்கெட்டு மற்றும் சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ளன. தர்பூசணி கிலோ ரூ.15 முதல் விற்பனையாகிறது.

    இதேபோல் எலுமிச்சை பழம் வரத்தும் அதிகரித்துள்ளது. பழைய பஸ் நிலையம், மண்டித் தெரு பகுதிகளில் சாலையோரங்களிலும் எலுமிச்சை பழங்கள் விற்பனையாகிறது.

    வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×