search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டர்பனில் ஏற்பட்ட பழுது நீக்கம்: கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது
    X

    டர்பனில் ஏற்பட்ட பழுது நீக்கம்: கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது

    கூடங்குளம் முதல் அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலையில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் அதில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. முதல் அணு உலை, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி மின்உற்பத்தியை தொடங்கியது.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த அணு உலையில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பி அங்கிருந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்து கடந்த 16-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதலில் 70 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக 450 மெகாவாட் வரை அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் முதல் அணு உலையில் உள்ள டர்பன் வால்வு நேற்று முன்தினம் பழுதானது. இதனால் அதில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரி செய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது. இந்திய- ரஷ்ய விஞ்ஞானிகள் இணைந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலையில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் அதில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.


    Next Story
    ×