search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை மறுநாள் பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
    X

    நாளை மறுநாள் பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு

    பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு செய்து வருகிறார்.
    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முகத்தோற்றத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.



    நாளை மறுநாள்(24-ந் தேதி) மகாசிவராத்திரி விழாவையொட்டி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதை இன்று காலை கோவை வந்தார்.

    ஈஷா யோகா மையத்துக்கு சென்ற அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தால் விமான நிலையத்தில் கார் மூலம் விழா நடைபெறும் இடத்துக்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தனர். இதற்காக குண்டு துளைக்காத 2 கார்கள் கோவையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி.பியூஸ் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் கோவை வந்தனர். அவர்கள் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். விழா நடைபெறும் இடம் மலையை ஒட்டியிருக்கும் பகுதி என்பதால் அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விழா நடைபெறும் இடம் இன்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    மேலும் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடத்தப்படுகிறது.

    தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறது. பிரதமர் வருகையின் போது அவர்களால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி மேற்பார்வையில் நக்சல் தடுப்பு போலீ சார் மற்றும் அதிரடிப்படையினர் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதிகளில் உள்ள ஆதிவாசி குடியிருப்பு பகுதிகள், மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×