search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்: முன்னாள் நீதிபதி கட்ஜூ
    X

    சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்: முன்னாள் நீதிபதி கட்ஜூ

    “மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. சசிகலா 4 ஆண்டு தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கட்ஜூ கூறினார்.
    திருச்சி:

    திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ‘வருங்கால இந்தியாவில் இளம் தொழில்முனைவோரின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களுடைய செயல்பாடு குறித்து விமர்சிக்க வேண்டும்.

    சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானது. ஆனால் மறுஆய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

    பெரும்பாலான வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளன. மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. ஆகவே சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது. தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடு சரியாக உள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் தான் அவரால் ஆட்சி அமைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×