search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் திட்ட பணிகளுக்கு சசிகலா கமி‌ஷன் கேட்டார்: முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    X

    குடிநீர் திட்ட பணிகளுக்கு சசிகலா கமி‌ஷன் கேட்டார்: முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    ஜெயலலிதா ஆட்சியின் போது குடிநீர் திட்ட பணிகளுக்கு சசிகலா என்னிடம் குறைந்த பட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் வரை கமி‌ஷன் கேட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தீபாவின் ஆதரவாளருமான வி.பி.சந்திரசேகர் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் ஆரம்ப கால ஆட்சியில் 1991-96 வரை நான் எம்.எல்.ஏ.வாகவும், குடிநீர் வடிகால் வாரிய தலைவராகவும் இருந்தேன்.

    அப்போது குடிநீர் திட்ட பணிகளுக்கு சசிகலா என்னிடம் குறைந்த பட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் வரை கமி‌ஷன் கேட்பார். ஆனால் நான் அந்த தொகையை தராததால் என்னை பதவியில் இருந்து நீக்கினார்.

    தற்போது சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். அதில் ஜெயலலிதாவின் பெயர் சேர்க்கப்பட்டது தவறு.

    முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை, தீபா சந்தித்ததை வரவேற்கிறேன். இதனால் தமிழகத்துக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அடிமட்ட தொண்டர்களும், பொதுமக்களும் பன்னீரையும், தீபாவையும் ஆதரிக்கிறார்கள்,

    சசிகலாவை யாருமே விரும்பவில்லை. பதவிக்கு ஆசைப்பட்டு தான் இப்போது எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் உள்ளனர்.

    தற்போது தினகரன், வெங்கடேசனை சசிகலா கட்சியில் சேர்ந்துள்ளார். 2011-ல் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களை சேர்த்திருப்பது கட்சிக்கு நல்லதல்ல.

    ஜெயலலிதாவின் எண்ணத்தின் படி தான் பன்னீரும், தீபாவும் செயல்படுவார்கள். உண்மையான அ.தி.மு.க.வே பன்னீரும், தீபாவும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×