search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பால் நிறுவனங்களின் தயிர் விலை கிலோவிற்கு ரூ 7 உயர்வு
    X

    தனியார் பால் நிறுவனங்களின் தயிர் விலை கிலோவிற்கு ரூ 7 உயர்வு

    தனியார் பால் நிறுவனங்களின் தயிர் விலை கிலோவிற்கு ரூ 6 முதல் ரூ. 7 வரை மறைமுகமாக உயர்த்தியுள்ளது.

    சென்னை:

    தனியார் பால் நிறுவனங்கள் தயிர் விலையை உயர்த்தியுள்ளது. ஹெரிடேஜ் நிறுவனம் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 25 கிராமும், 500 கிராம் தயிர் பாக்கெட்டில் 50 கிராம் அளவை குறைத்து விற்பனை விலையை ஒரு கிலோவிற்கு ரூ 6 முதல் ரூ. 7 வரை மறைமுகமாக உயர்த்தியுள்ளது.

    இதே போல ஹட்சன் பால் நிறுவனமும் கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ தயிருக்கு ரூ. 4-ஐ உயர்த்தியது. இரண்டு நிறுவனங்களும் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென தயிர் விலையை அதிகரித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    இரண்டு பால் நிறுவனங்களும் தன்னிச்சையாக தயிர் விலையை உயர்த்தியதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடுக்காவிட்டால் மற்ற பால் நிறுவனங்களும் பால், தயிர், பால் பொருட்கள் விலையை உயர்த்தி விடுவார்கள்

    ‘திருமலா’ பால் நிறுவனம் ‘கப்’ தயிருக்கான விலையை வரலாறு காணாத வகையில் ஒரு கிலோவிற்கு ரூ.25 உயர்த்துவதாக நேற்று பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ தயிர் ரூ 75-ல் இருந்து ரூ. 100 ஆக உயரக்கூடும்.

    தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. தனியார் பால் விற்பனையை அரசு வரமுறைப்படுத்த தவறினால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே அரசு இதில் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×