search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்
    X

    மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்

    கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தான் தன்னந்தனியாக போராடத் தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை: முதல்வர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய தன்னை அ.தி.மு.க. த நிலவும் பிரச்னைகள்  உள்ளிட்டவற்றை வெளியில் சொல்ல முடியாமல் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் 45 நிமிடங்கள் தியானம்  செய்துவிட்டு புறப்பட்டார்.

    தலைமை செயலகத்திலிருந்து காமராஜர் சாலை வழியாக சென்றுகொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தச் சொல்லிய  பன்னீர்செல்வம் அங்கு தியானம் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, அவர் கூறியதாவது,

    புரட்சி தலைவி அவர்களது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்த எனது மனசாட்டி உந்தியதால் தியானம் செய்ததாக கூறிய  பன்னீர்செல்வம், நாட்டு மக்களுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும் சில உண்மை விவரங்களை தெரியபடுத்த அம்மாவின்  ஆன்மா என்னை உந்தியது. அதுவே எனது கடமையும் ஆகும் என்ற கூறினார்.

    பின்னர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானது, அவரது உயிரிழப்பு என கட்சி பல இன்னல்களை சந்தித்ததால் கட்சியையும்  ஆட்சியையும் ஏற்க வேண்டிய நிலை வந்தது.

    அதனைத்தொடர்ந்து முதல்வர் பதவியை ஏற்ற என்னை கட்சித்தலைமை அசிங்கப்படுத்தியது என்று கூறிய பன்னீர், தனக்கு கீழே  பதவியில் இருக்கும் அமைச்சரே தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொல்வது நியாயமா? அது நீதியா என்றார்?

    என்னை முதலமைச்சராக உக்கார வைத்துக் கொண்டு இவ்வாறு அசிங்கப்படுத்தலாமா என்று வேதனை தெரிவித்த பன்னீர்  செல்வம் கட்சித்தலைமையின் வற்புறுத்தலாலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

    மேலும் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தான் தன்னந்தனியாக போராடத் தயாராக உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    Next Story
    ×