search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருவாயூர் எக்ஸ்பிரஸ்- கோவை பாசஞ்சர் ரெயில்கள் ரத்து: பயணிகள் பரிதவிப்பு
    X

    குருவாயூர் எக்ஸ்பிரஸ்- கோவை பாசஞ்சர் ரெயில்கள் ரத்து: பயணிகள் பரிதவிப்பு

    நாகர்கோவிலில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவை பாசஞ்சர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பரிதவிப்பிற்குள்ளானார்கள்.
    நாகர்கோவில்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

    இதனால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக நேற்று காலை வந்து சேர்ந்தது.

    நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், புனலூர்-மதுரை பாசஞ்சர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இங்கிருந்து இன்று காலை 5.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த ரெயில் இன்று ரத்து செய்யப்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் கோவை பாசஞ்சர் ரெயிலிலும் இன்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த ரெயில் இன்று காலை அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    இந்த ரெயில்திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, காட்பாடி வழியாக மாற்றி விடப்பட்டிருந்தது. ரெயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடந்தனர்.

    கைக்குழந்தைகளுடன் பெண்கள் பரிதவிப்பிற்கும் ஆளானார்கள்.

    நாகர்கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் எந்த ரெயில்களும் இன்று காலை வந்து சேரவில்லை.

    நெல்லை மார்க்கமாக ரெயில்கள் இன்று காலையில் இயக்கப்படாததால் பொது மக்கள் மிகவும் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நெல்லை செல்வதற்காக ஏராளமான பொதுமக்களும், ஊழியர்களும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில்கள் இயக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் தயார் நிலையில் இருந்த பின்பும் தண்டவாளங்கள் சரி இல்லாததால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    Next Story
    ×