search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 கன அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23 கன அடியாக குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 23 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பை விட நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் எப்போதும் இல்லாத அளவுக்கு காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 1 மாதத்திற்கும் மேலாக குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று வினாடிக்கு 81 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 23 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

    நேற்று 35.13 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 35.12 அடியாக குறைந்து உள்ளது.
    Next Story
    ×