search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் மாடுவிடும் விழாவுக்கு காளைகளுக்கு தீவிர பயிற்சி
    X

    வேலூரில் மாடுவிடும் விழாவுக்கு காளைகளுக்கு தீவிர பயிற்சி

    வேலூர் மாவட்டத்தில் மாடுவிடும் விழாவுக்கு காளைகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி மாடுவிடும் விழா நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி, ஆம்பூர், அணைக்கட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, காட்பாடி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாடுவிடும் விழாபாரம் பரியமாக நடந்து வருகிறது.

    ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பதால் மாடுவிடும் விழா நடத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தடையை மீறி மாடுவிடும் விழா நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது மாடுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த காளைகளுக்கு தினமும் நீச்சல் பயிற்சி, ஓட்டம், மணல் குவியலை முட்ட செய்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கின்றனர்.

    மாட்டு தீவனங்கள் பருத்தி கொட்டை, புண்ணாக்கு, முட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தால் இந்த ஆண்டு கோலாகலமாக மாடுவிடும் விழா நடத்துவோம் என விழா குழுவினர் தெரிவித்தனர். அனுமதியின்றி மாடுவிடும் விழா நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வருவாய் துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×