search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்த மழை வெள்ளம் - விவசாயிகள் அதிர்ச்சி
    X

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்த மழை வெள்ளம் - விவசாயிகள் அதிர்ச்சி

    ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றுபடுகையில் மழை தண்ணீருடன் சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    சென்னிமலை:

    நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளை யத்தில் ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற 1996-ம் ஆண்டு 423 ஹெக்டரில் 40 அடி கொள்ளளவில் அணை கட்டப்பட்டது.

    தற்போது திருப்பூர் பகுதியில் செயல்படும் பின்னலாடை சாய கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்பட்டாதால் அணை நீர் பயன்படாமல் போய்விட்டது

    அணை பகுதியில் உள்ள நிலங்களும் கெட்டுவிட்டது. அணையை திறந்தே வைப்பதால் அணைக்கு வரும் நீர் வெளியேற்ற படுவதால் அணை பகுதி எப்போதும் வரண்டு தான் காணப்படும்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வெள்ளியங்கிரி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் கொஞ்சம் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மழை வெள்ளம் இருந்தாலும் அணையில் தற்போது தேங்கி நிற்கும் தண்ணீர் சாய கழிவு நீர் போல் தான் காட்சி அளிக்கிறது.

    மேலும் தற்போது நொய்யல் நதியில் வரும் தண்ணீரில் சாயக்கழிவு கலந்து தான் வருகிறது. இது நொய்யல் ஆற்றுப்படுகை விவசாயிகளுக்கு பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பகுதியில் பின்னலாடை சாயப்பட்டறை களில் கழிவுநீரை சுத்தம் செய்துகூட வெளியேற்ற கூடாது என மாசுகட்டு பாட்டு வாரியத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூரிலும் கடுமையாக அதிகாரிகள் சோதனை நடத்தி பல சாயப்பட்டறைகளை மூடிவிட்டனர். எனினும் தற்போது வந்துள்ள மழை நீருடன் சாயக்கழிவு நீர் கலந்து தான் நொய்யல் ஆற்றில் ஓடுகிறது.

    இது காவேரியில் வேறு கலப்பதால் கரூர், நாமக்கல், திருச்சி மாவட்ட மக்களும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
    Next Story
    ×