search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படும் காட்சி
    X
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படும் காட்சி

    ரூபாய் நோட்டு பிரச்சினை: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிப்பு

    பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.20 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தென்தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறிச் சந்தை உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், தாராபுரம், கரூர் போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து இங்கு விவசாயிகளால் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கமி‌ஷன் கடைகள் மூலம் காய்களை வியாபாரிகள் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். தினசரி சுமார் 600 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. முக்கிய விசே‌ஷ நாட்களில் காய்கறிகளின் அளவு கூடுதலாக இருக்கும்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதம் கேரள மாநிலத்துக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து தினசரி நடைபெறும் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பழைய நோட்டுகளை வாங்கிச் சென்று வங்கியில் செலுத்தி விடுகின்றனர். இதே போல கேரள வியாபாரிகளும் பழைய நோட்டுகளை கொடுத்தே காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் கேரளாவில் சில்லரை விலையில் காய்கறிகளை விற்கும் போது பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கேரள வியாபாரிகள் வாங்கும் காய்கறிகளின் அளவை குறைத்து விட்டனர். இது தவிர தற்போது பெரும்பாலான காய்கறிகள் விலை பாதியாக குறைந்து விட்டதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதில் ரூபாய் நோட்டு பிரச்சினையும் சிக்கிக் கொண்டதால் வேறு வழியின்றி பழைய நோட்டுகளை வாங்கி தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக தினசரி சுமார் ரூ. 70 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செல்லாது என ரூபாய் நோட்டுகளை அறிவித்த பிறகு இது வரை ரூ.20 கோடி அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×