search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு
    X

    பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு

    கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.95 அடியாக பதிவாகியது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று மதியம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 195 கனஅடி வீதம் மழை நீர் வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.95 அடியாக பதிவாகியது. 243 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூண்டி ஏரியில் கடந்த 27-ந் தேதி நீர் மட்டம் 17.05 அடி பதிவாகி இருந்தது. வெறும் 71 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு இருந்தது. அதாவது 5 நாட்களில் நீர் மட்டம் 2.90 அடி உயர்ந்து உள்ளது. 172 மில்லியன் கனஅடி தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்து உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×