search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்
    X

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல்

    புழல் ஜெயிலில் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம், டிச. 2-

    புழல் ஜெயிலில் விசா ரணை கைதிகள் அடைக் கப்பட்டுள்ள 5-வது பிளாக்கில் ஜெயிலர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அடிதடி வழக்கில் கைதான கொளத்தூரை அடுத்த குமணன் நகரை சேர்ந்த தினேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த 2 செல்போன்களும் சிக்கியது. அவற்றை கைதிகள் பயன்படுத்தி விட்டு புதைத்து வைத்திருந்தது தெரிந்தது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் கைதிகளிடம் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஜெயிலில் செல் போன் சிக்கி இருப்பது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் யார்-யாருக்கு பேசப்பட்டது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? இதற்கு ஜெயில் அதிகாரிகள் உடந் தையா? என்று விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×