search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    சேலம்:

    மேட்டூரில் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள் உள்ளன.இதில் பழைய அனல் மின் நிலையத்தில் மட்டும் 4 யூனிட்கள் உள்ளன.

    ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் தலா 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    வழக்கமாக மின்சாரம் தேவை குறைவாக இருக்கும் போது இந்த அனல் மின் நிலையங்களை நிறுத்தி வைத்து பராமரிப்பு பணிகளை செய்வது வழக்கம். அதன்படி நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் மின் தேவை குறைந்துள்ளது. பணி தொடக்கம்

    இதையடுத்து அனல் மின் நிலையத்தின் 2-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் இன்று தொடங்கியது. 10 நாட்கள் வரை நடைபெறும் இந்த பராமரிப்பு பணியில் பழுதானவற்றை மாற்றுவது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .

    இதனால் அந்த யூனிட்டின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின்சாரம் தற்போது தடைபட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அதில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

    இதையடுத்து ஒவ்வொரு யூனிட்டிலும் அடுத்தடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×