search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஸ்வைப் எந்திரம் வாங்க ஆர்டர்
    X

    திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஸ்வைப் எந்திரம் வாங்க ஆர்டர்

    திருப்பூர் பகுதியில் உள்ள வங்கிகள் 3 ஆயிரம் ஸ்வைப் கருவி வாங்க பெங்களூர், சென்னை, மும்பை பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளன.

    திருப்பூர், டிச. 2-

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பண பரிவர்த்தனையில் வெளிப்படை தன்மையை உருவாக்கும் வகையில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது.

    பணம் இல்லாத பரிவர்த்தனையை ஊக்க ப்படுத்தும் விதமாக ஸ்வைப் எந்திரத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் வேலைப்பார்த்து வரு கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இதுவரை வாரந்தோறும் சம்பளம் நேரிடையாக கைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பண பிரச்சினை காரணமாக தற்போது தொழிலாளர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது.வங்கி மூலம் இனி அவர்களுக்கு சம்பளம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பணப்புழக்கம் குறைந்து விட்டதால் பெரும்பாலான நிறுவனங்களில் விற்பனை குறைந்து விட்டது. எனவே விற்பனையை அதிரிக்கவும், நேரடியாக பணத்தை பெறுவதை தவிர்க்கவும் திருப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்வைப் எந்திரத்துக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

    ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஸ்வைப் எந்திரங்கள் உள்ளன. மற்ற வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது,

    திருப்பூர் பகுதியில் உள்ள ஏராளமான வர்த்தகர்கள் பாயின்ட் ஆப் சேல் கருவி வேண்டி, வங்கிகளிடம் விண்ணப்பித்து வருகிறார்கள். இக்கருவி வழங்கும் போது, தொலை பேசி இணைப்பும் வழங்கப்படும். எந்திரம் பயன்படுத்தும் நிறுவனத்தின் பயன்பாட்டு மதிப்பை பொறுத்து. கட்டணம் அடிப்படையிலும், இலவச மாகவும் இந்த சேவை செயல்படுத்தப்படும்.

    தற்போது ஸ்வைப் எந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய மெஷின்கள் வாங்க திருப்பூர் பகுதியில் உள்ள வங்கிகள் 3 ஆயிரம் ஸ்வைப் கருவி வாங்க பெங்களூர், சென்னை, மும்பை பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளன.

    Next Story
    ×