search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் 49 அடியாக சரிவு: மேட்டூர் அணை சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
    X

    நீர்மட்டம் 49 அடியாக சரிவு: மேட்டூர் அணை சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

    இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கும் என்பதால் சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    சேலம்:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் பல முறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று 148 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 91 கன அடியானது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நேற்று 51.37 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 49.68 அடியாக குறைந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் போது மேட்டூர் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சுரங்க மின் நிலையத்தில் நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கலாம். அப்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 அடியாக இருக்கும் வரை மட்டுமே சுரங்க மின் நிலையம் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து மின் உற்பத்தி செய்ய முடியும். அதே போல அணை மின் நிலையம் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தால் அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறையும் வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.

    தற்பேது அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு சுமார் 2 அடி வீதம் குறைந்து வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில்அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கும் என்பதால் சுரங்க மின் நிலையத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு அணையின் கீழ் மட்ட மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×