search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் போதை பொருள் கடத்தியதாக 3 தமிழக மீனவர்கள் கைது
    X

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் போதை பொருள் கடத்தியதாக 3 தமிழக மீனவர்கள் கைது

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் போதை பொருள் கடத்தியதாக 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதும், சிறை பிடித்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் சிறிய கப்பல்களில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஒரு விசைப்படகு மட்டும் தனியாக நின்றிருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த இலங்கை கடற்படையினர் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது பாம்பனை சேர்ந்த 3 மீனவர்கள் படகில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படகில் விலை உயர்ந்த 3 கிலோ எடை கொண்ட போதை பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இலங்கை கடற்படையினர் போதை பவுடர் மற்றும் படகையும் பறிமுதல் செய்ததோடு 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    போதை பொருட்கள் கடத்தியதாக 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×