search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை பலி
    X

    திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை பலி

    திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருப்பதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது 10 மாத ஆண் குழந்தை ஜோதிஸ்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமூர்த்தி, திருத்தணியை அடுத்த மங்காபுரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார்.

    அப்போது குழந்தை ஜோதிஸ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவன் வாந்தி, மூச்சு திணறலால் அவதிப்பட்டான். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை.

    உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து ஜோதிசை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி குழந்தை ஜோதிஸ் பரிதாபமாக இறந்தான்.

    மர்ம காய்ச்சலுக்கு 10 மாத குழந்தை பலியான சம்பவம் திருத்தணி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்ம காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்தபோது திருத்தணி பகுதியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தினர்.

    இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, “திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மர்ம காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பலியான குழந்தை ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    எனினும் மங்காபுரம் பகுதியில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். காய்ச்சலால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்களா? என்று ஆய்வு செய்தனர். காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்“ என்றார்.

    Next Story
    ×