search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுக்கு தீபாவளி டிரெஸ் வாங்கப் போறீங்களா?
    X

    குழந்தைகளுக்கு தீபாவளி டிரெஸ் வாங்கப் போறீங்களா?

    குழந்தைகளுக்கு உடை வாங்கும்போது செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
    நெருங்கி வரும் தீபாவளியை முன்னிட்டு பலரும் ஷாப்பிங் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பலகாரம், பட்டாசு, புதுத்துணிகளுடன் தீபாவளி கொண்டாடும் முனைப்பில் உள்ள பெற்றோர்கள் பலரும் கடைக்கு டிரெஸ் எடுக்க செல்லும்போது முதலில் குழந்தைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம்.

    இந்நிலையில் குழந்தைகளுக்கு டிரெஸ் எடுக்க செல்லும்போது எந்தெந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    • என்னென்ன வாங்கப் போகிறீர்கள் என்பதை வீட்டிலேயே திட்டமிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் பட்ஜெட் கையை மீறி செல்வதுடன் குழந்தைகளின் அலமாரியும் தேவையில்லாத துணிகளால் நிரம்பி வழியும்.

    • குழந்தைகளுக்கு உடை வாங்கும்போது அவர்களின் தேவைக்கேற்ற சரியான அளவிலேயே வாங்குங்கள். வளரும் குழந்தை தானே என்று உடையின் அளவு பெரிதாக எடுத்தால் அவர்கள் அசவுகரியமாக உணருவார்கள்.

    • கடைக்கு செல்லும்போது உங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்யும்போது அவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

    • பச்சை, வெள்ளை என்று வழக்கமான சில வண்ணங்களை விடுத்து புதிய வண்ணங்களில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வித்தியாசமான வண்ணங்கள், அளவுகளிலான உடைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

    • பெரியவர்கள் போல உடைகளை அணிந்து கொண்டு குழந்தைகள் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். ஓடுவது, ஆடுவது, குதிப்பது என துறுதுறுவென வளைய வருவார்கள். அதனால் நீங்கள் வாங்கும் உடைகள் அவர்களுக்கு கம்பர்ட் உணர்வை அளிப்பது மிகவும் முக்கியம்.
    • தேவையான உடைகளை மட்டும் வாங்குங்கள். அளவுக்கு அதிகமான உடைகள் வாங்கும்போது அவை சேதமடையும் வாய்ப்புகள் அதிகம்.

    • குழந்தைகள் புதுத்துணி அணிந்து பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் இருந்து கண்காணித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

    Next Story
    ×