search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் புழுக்கள் இருப்பதாக புகார்
    X

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் புழுக்கள் இருப்பதாக புகார்

    ஊத்துக்கோட்டை அருகே பொது மக்கள் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக புகார் செய்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை ஊராட்சிக்கு உட்பட்ட பள்ள காலனில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 1980-ல் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுகொண்ட குடிநீர் மேல்நிலைதொட்டி உள்ளது. இதில் இருந்து குழாய்கள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக குழாய்களில் புழுக்களுடன் குடிநீர் வருகிறது. மேலும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள்குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஒதப்பை ஊராட்சில் நேற்று அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

    அப்போது காலனி பொது மக்கள் புழுக்களுடன் வரும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வந்து புகார் செய்தனர். குழாய்களில் புழுக்களுடன் குடிநீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் விஜயலட்சுமி உறுதி அளித்தார். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    இதுபற்றி பொது மக்கள் கூறும்போது, சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கிராம எல்லையில் உள்ள குசஸ்தலை ஆற்றிலிருந்து குடிநீர் மேல் நிலை தொட்டி வரை பூமிக்கு அடியில் பைப்புகள் பதிக்கப்பட்டது.

    மேல்நிலை தொட்டியிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் உள்ளன. இதிலிருந்து வெளிேறும் கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டுள்ள பைப்புகளில் சேர்ந்து விடுகிறது. மேலும் குடிநீர் மேல்நிலை தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்ய வில்லை என்றனர்.

    Next Story
    ×