search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பணம்-பரிசு பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க 30 பறக்கும் படைகள்
    X

    நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பணம்-பரிசு பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க 30 பறக்கும் படைகள்

    நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பணம்- பரிசு பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க 30 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்று புதுவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சத்யேந்திரசிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்காக மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தொகுதி தேர்தல் அலுவலராக தொழில்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் செயல்படுவார்.

    பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு காவல்துறை, மண்டல அதிகாரியால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதாக யாராவது புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இடைத்தேர்தலில் பண நடமாட்டம், பொருட்கள் வினியோகத்தை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்படும். இதில் நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் 6 பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

    தேர்தலுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, கட்டணமில்லா தொலைபேசி, வாட்ஸ்அப் எண் போன்றவை அமைக்கப்படும்.

    வாக்காளர்களுக்கு வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தேர்தலையொட்டி புதுவை மாவட்டத்தில் உரிமம் பெற்ற 210 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×