search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது

    சங்கரன்கோவில் அருகே, பூட்டிக் கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில், கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் செல்லப்பட்டி அருகே கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை ஒன்று பூட்டியே கிடந்தது. வெளிப்புற கேட் கதவு பூட்டப்பட்ட நிலையில் தொழிற்சாலைக்குள் இருந்த 11 அறைகள் திறந்து கிடந்தன.

    இங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி சத்தம் கேட்டதும், அந்தப்பகுதியில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் உள்ள 2 தனியார் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினரும், போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெடிச்சத்தம் கேட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமாக கிடந்தது.

    விசாரணையில், ‘பட்டாசு தொழிற்சாலையை பூட்டியபோதே அதில் இருந்த அனைத்து மூலப்பொருட்களையும் அப்புறப்படுத்தி விட்டதாக உரிமையாளர்கள் கூறினர். காலியாக கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே சமயம், பூட்டிக் கிடந்த தொழிற்சாலையில் முன்பு பட்டாசு தயாரிக்கப்பட்ட 11 அறைகளும் திறந்து கிடந்துள்ளன.

    இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு நேரத்தில் குறிப்பிட்ட அறையை வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வந்தனரா? அல்லது வேறு எந்த வகையில் வெடி விபத்து நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×