search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மட்டம் சரிவு: மேட்டூர் அணையில் பாதிக்கு மேல் வெளியே தெரியும் நந்தி சிலை
    X

    நீர்மட்டம் சரிவு: மேட்டூர் அணையில் பாதிக்கு மேல் வெளியே தெரியும் நந்தி சிலை

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 58.78 அடியாக சரிந்துள்ளதால் நீர்பரப்பு பகுதியில் உள்ள நந்தி சிலை பாதிக்கும் மேல் வெளியே தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டு போதுமான நீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக கடந்த மாதம் 20-ந் தேதி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 78 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 87.68 அடியாகவும் இருந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரை கர்நாடக அரசு படிப்படியாக குறைத்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு 1017 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 484 கன அடியானது. நேற்று 60.14 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 58.78 அடியானது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் தினமும் ஒன்றரை அடிக்கு மேல் சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணை பன்னவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்திசிலை நீர்மட்டம் 70 அடியாக சரியும் போது லேசாக வெளியில் தெரியும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 58.78 அடியாக சரிந்துள்ளதால் நீர்பரப்பு பகுதியில் உள்ள நந்தி சிலை பாதிக்கும் மேல் வெளியே தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×