search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ. 67 லட்சம் மோசடி புகார் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சி: அதிகாரிகள் சமரச பேச்சு
    X

    ரூ. 67 லட்சம் மோசடி புகார் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சி: அதிகாரிகள் சமரச பேச்சு

    பேராவூரணி அருகே கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவா சத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இங்கு ரூ. 67 லட்சம் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகள் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கி செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தலைவர் மற்றும் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து சேதுபாவா சத்திரம் விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் வங்கியை முற்றுகையிட முயன்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கடை வீதியில் குவிந்தனர்.

    இதையடுத்து அங்குள்ள சமுதாய கூடத்தில் போராட்ட குழுவை சேர்ந்த தலைவர் கோவிந்தராஜூ, செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சிவசாமி, ஒருங்கிணைப்பாளர் சரபோஜி ஆகியோருடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    இதில் போராவூரணி தாசில்தார் தங்க. பிரபாகரன், அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெய்குமார், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர், விசாரணை அலுவலர் கோவிந்தராஜூ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்கள மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    இதையடுத்து முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி தலைவர் சமய முத்து, ராவுத்தன் வயல் ஊராட்சி தலைவர் தஸ்தகீர், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், துறையூர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×