search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட்
    X

    லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட்

    ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid
    லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது.

    இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ரியல் மாட்ரிட் அணி களம் இறங்கியது. ஆனால் 23-வது நிமிடத்தில் டெபோர்டிவோ அணியின் அட்ரியன் லோபஸ் கோல் அடித்து ரியல் மாட்ரிட் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

    அதன்பின் ரியல் மாட்ரிட் வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 32-வது நிமிடத்தில் நசோவும், 42-வது நிமிடத்தில் கரேத் பேலேயும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் ரியல் மாட்ரிட் ஆதிக்கம் செலுத்தியது. 58-வது நிமிடத்தில் கரேத் பேலே மேலும் ஒரு கோல் அடித்தார். பின்னர் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 78 மற்றும் 84-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார்.

    84-வது நிமிடத்தில் அடித்த கோலை தலையால் முட்டி கோல் எல்லைக்குள் தள்ளினார். அப்போது எதிரணி வீரரின் கால் ரொனால்டோவின் முகத்தில் பலமாக தாக்கியது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறினார்.



    88-வது நிமிடத்தில் நசோ மேலும் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 7-1 என வெற்றி பெற்றது. #Laliga #garethBele #Ronaldo #realMadrid
    Next Story
    ×