search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணியை வீழ்த்தியது எப்.சி. புனே சிட்டி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணியை வீழ்த்தியது எப்.சி. புனே சிட்டி

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. புனே சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2017 #FCPuneCity #AtheleticodeKolkata

    புனே:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புனேவில் இன்று இரவு 8:00 மணிக்கு தொடங்கிய 52-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி - அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் புனே அணியின் அடில் கான் முதல் கோல் அடித்தார். ஆனால் கொல்கத்தா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தின் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் புனே அணி 1-0 என முன்னிலை பெற்றது.
     


    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டட்தின் 59-வது நிமிடம் புனே அணியின் தியாகோ கார்லோஸ் இரண்டாவது கோல் அடித்தார். இதனால் புனே அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து 77-வது நிமிடம் புனேவின் ரோஹித் குமார் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் எப்.சி. புனே சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இதன்மூலம் புனே அணி 19 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் நீடிக்கின்றன. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - டெல்லி டைனமோஸ் எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL2017 #FCPuneCity #AtheleticodeKolkata
    Next Story
    ×