search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்த டுமினி: 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்
    X

    ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்த டுமினி: 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்

    தென்ஆப்பிரிக்கா இடது கை பேட்ஸ்மேன் ஆன ஜேபி டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். #Dumini # CapeCobras
    தென்ஆப்பிரிக்காவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான மொமென்டம் ஒருநாள் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி நைட்ஸ் - கேப் கோப்ராஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த நைடஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேப் கோப்ராஸ் அணி 2-வது பேட்டிங் செய்தது.

    36-வது ஓவர் முடிவில் கேப் கோப்ராஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. எஸ்எம் கோமரி 65 ரன்னுடனும், ஜேபி டுமினி 30 பந்தில் 34 ரன்களும் எடுத்திருந்தனர்.



    37-வது ஓவரை எடி லெய் வீசினார். டுமினி எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார். 6-வது பந்தை எடி லெய் நோ-பால் ஆக வீசினார். அதில் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் ஸ்கோர் சமநிலை ஆனது. நோ-பாலிற்கு பதிலாக வீசிய கடைசி பந்தையும் சிக்சருக்கு துரத்தினார். இதன்மூலம் ஓரே ஓவரில் 37 ரன்கள் குவித்து டுமினி சாதனைப் படைத்துள்ளார்.

    டுமினி ஒரே ஓவரில் 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச கேப் கோப்ராஸ் 37 ஓவரில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி 37 பந்தில் 70 ரன்கள் குவித்தார். 2013-ம் ஆண்டு வங்காள தேசத்தில் நடைபெற்ற பிரிமீயர் லீக்கில் ஜிம்பாப்வே வீரர் சிகும்புரா ஒரு ஓவரில் 39 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. #Dumini #CapeCobras
    Next Story
    ×