search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல்
    X

    பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்தது லிவர்பூல்

    பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது லிவர்பூல். #PremierLeague #mancity #Liverpool
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முதல் போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

    அதன்பின் நேற்று லிவர்பூல் அணியை சந்திக்கும் வரை தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தது. 22 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வந்த மான்செஸ்டர் சிட்டி, நேற்று லிவர்பூல் அணிக்கு சொந்தமான மைதானத்தில் அந்த அணியை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி விளையாடியது.

    முதல் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணியை 5-0 என துவம்சம் செய்த மான்செஸ்டர் சிட்டி இந்த போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் லிவர்பூல் அணி வீரர்கள் தங்களது சொந்த மைதானத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ரொபர்ட்டோ ஃபிர்மினோ கொடுத்த பந்தை அலெக்ஸ் ஆக்ஸ்லேடு-சேம்பர்லைன் அபாரமான வகையில் கோலாக மாற்றினார். இதற்கு பதில் கோலாக ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் லெரோய் சானே கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் 1-1 என இரு அணியும் சமநிலையில் இருந்தது.



    2-வது பாதி நேரத்தில் லிவர்பூல் அணி வீரர்களில் ஆட்டத்தில் அனல் பறந்தது. 59-வது நிமிடத்தில் ஃபிர்மினோ, 61-வது நிமிடத்தில் சாடியோ மானே, 68-வது நிமிடத்தில் மொகமது சாலா அடுத்தடுத்து கோல் அடித்து மான்செஸ்டர் அணியை திக்குமுக்காடச் செய்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மான்செஸ்டர் அணியால் விரைவில் மீளமுடியவில்லை.

    ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்னி அணியின் பெர்னாடோ சில்வா கோல் அடித்தார். இதனால் 2-4 என மான்செஸ்டர் சிட்டி பின்தங்கியிருந்தது. அதன்பின் ஆட்டத்தில் வேகத்தை காட்டினார்கள்.

    ஆட்டம் தடை மற்றும் வீரர்கள் மாற்று நேரம் ஆகிவற்றை கணக்கில் கொண்டு 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் 91-வது நிமிடத்தில் குண்டோகோன் கோல் அடித்தார். இதனால் 3-4 என மான்செஸ்டர் சிட்டி பின்தங்கியிருந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் போட்டியை டிரா செய்து விடலாம் என மான்செஸ்டர் சிட்டி நினைத்தது.



    இதற்கான வாய்ப்பு கடைசி நிமிடமான 94-வது நிமிடத்தில் கிடைத்தது. கடைசி நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மான்செஸ்டர் சிட்டி கோல் அடிக்க முயன்றது. ஆனால் மயிரிழையில் கோல் வாய்ப்பு பறிபோனது. இதனால் மான்செஸ்டர் சிட்டி 3-4 என தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது.

    23 போட்டிகளில் முடிவில் மான்செஸ்டர் சிட்டி 62 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 47 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. #PremierLeague #mancity #Liverpool #PepGuardiola 
    Next Story
    ×