என் மலர்
செய்திகள்

அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு
2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் ஸ்டிரைக்கர் மொகமது சாலா தேர்வாகியுள்ளார். #LiverPool #MohamedSalah
எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரர் (striker) மொகமது சாலா. 25 வயதாகும் இவர் ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்கு மாறியதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார்.
ரஷியாவில் ஜூன் மாதம் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலகக்கோப்பையில் எகிப்து அணி தகுதிபெற மொகமது சாலா முக்கிய நபராக விளங்கினார்.

இந்நிலையில் அரேபிய நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் 2017-ம் ஆண்டில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்ய அரேபிய நாடுகளில் உள்ள 100 விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள் கருத்து கணிப்பு நடத்தினார்கள்.
இதில் மொகமது சாலா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணிக்காக விளையாடும் சிரிய வீரர் ஒமர் கிரிபின் 2-வது இடத்தையும், மற்றொரு சிரிய வீரர் ஒமர் அல்-சோமா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மொகமது சாலா ஆப்பிரிக்காவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

Next Story