search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது மேர்போர்ன் ரெனிகேட்ஸ்
    X

    பிக் பாஷ் 2017-18: லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது மேர்போர்ன் ரெனிகேட்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மேர்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீழ்த்தியது.
    பிரிஸ்பேன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - மேர்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் ஹோபார்ட் மைதானத்தில் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் டார்கி ஷார்ட், பென் மெக்டெர்மோட் ஆகியோர் தலா 34 ரன்களும், அலெக்ஸ் டூலன் 26 ரன்களும், ஜார்ஜ் பெய்லி 25 ரன்களும், டெனியல் கிறிஸ்டெய்ன்  23 ரன்களும் எடுத்தனர். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி தரப்பில் வெயின் பிராவோ சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.



    பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸ் - கேமரான் ஒயிட் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

    சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஹாரிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் கூப்பர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பிராட் ஹாட்ஜ்- ஒயிட்டுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஒயிட் 79 ரன்களுடனும், ஹாட்ஜ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தார்

    சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்கள் வீழ்த்திய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் வெயின் பிராவோ ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×