search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அணிகள் அறிவிப்பு
    X

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அணிகள் அறிவிப்பு

    ரஷியாவில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான 32 அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
    ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது உலக கோப்பை கால்பந்து ஆகும். ஒலிம்பிக்கை போலவே இந்தப் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    பிரேசிலில் 2014-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் நடக்கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெற்றது. மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்பட்டன.

    இந்நிலையில், நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டன. ஜூன் 14-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் குரூப் ஏ-வில் இடம்பிடித்த ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன. ரஷியாவின் 12 விளையாட்டு மைதானங்களில், ஜூலை 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.



    போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் விவரம் வருமாறு:  

    குரூப் ஏ: ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா
    குரூப் பி: போர்ச்சுகல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ
    குரூப் சி: பிரான்ஸ், பெரு, டென்மார்க், ஆஸ்திரேலியா
    குரூப் டி: அர்ஜெண்டினா, குரோசியா, ஐஸ்லாந்து, நைஜீரியா
    குரூப் இ: பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிக்கா, செர்பியா
    குரூப் எப்: ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென் கொரியா
    குரூப் ஜி: பெல்ஜியம், இங்கிலாந்து, துனிசியா, பனாமா
    குரூப் ஹெச்: போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்

    இதில் ஜெர்மனியும், மெக்சிகோவும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதுபோல், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகியவையும் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×