search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல்
    X

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாமை 2-0 என வீழ்த்தியது அர்செனல்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நார்த் லண்டனில் இன்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் அணியை அர்செனல் வீழ்த்தியது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்செனல் - டோட்டன்ஹாம் அணிகள் நார்த் லண்டனில் பலப்பரீட்சை நடத்தின.



    ஆட்டம் தொடங்கியது முதலே அர்செனல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் மெசுட் ஒசில் இடது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து அடித்து பந்தை, முஸ்டாஃபி தலையால் முட்டி கோல் அடித்தார்.



    அடுத்த ஐந்து நிமிடத்தில் அர்செனல் மேலும் ஒரு கோல் அடித்தது. அலெக்சான்ட்ரே லகாசெட்டே கொடுத்த பந்தை அலெக்சிஸ் சான்செஸ் கோலாக மாற்றினார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் அர்செனல் 2-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்செனல் 2-0 என வெற்றி பெற்றது.
    Next Story
    ×