என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனாவிற்காக 600-வது போட்டியில் களமிறங்கும் மெஸ்சி
    X

    பார்சிலோனாவிற்காக 600-வது போட்டியில் களமிறங்கும் மெஸ்சி

    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டனான மெஸ்சி, புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக 600-வது போட்டியில் களம் இறங்க உள்ளார்.
    அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 13 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அவர் 599 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



    இன்றிரவு லா லிகா தொடரில் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் செவியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெஸ்சிக்கு 600-வது போட்டியாகும். இந்த போட்டியின் மூலம் 600 போட்டிகளுக்கு மேல் விளையாடிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற உள்ளார். இதற்கு முன் சேவி ஹெர்னாண்டஸ் 767 போட்டிகளிலும், அந்த்ரேஸ் இனியெஸ்டா 642 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.



    ஆனால் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 523 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×