என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா?
    X

    டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா?

    டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

    அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர். ஐ.சி.சி. விதியின்படி ஒரு வீரர் இதுபோன்று தகவல் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்தி பேசக்கூடாது என்று உள்ளது. இந்த விதியை விராட் கோலி மீறினாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுபற்றி ஒரு பிசிசிஐ நடுவர் கூறுகையில், ‘‘முன்னதாகவே போட்டி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வாக்கி டாக்கியை பயன்படுத்தலாம்’’ என்று கூறினார்.



    மற்றொரு அதிகாரி ‘‘பொதுவாக உதவி அதிகாரிகள் இதுபோன்று வாக்கி டாக்கிகளை பயன்படுத்துவார்கள். வீரர்கள் முன்னதாக அனுமதி வாங்கி இதுபோன்று பயன்படுத்தலாம்’’ என்றார்.

    விராட் கோலி ஏற்கனவே ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவிடம் அனுமதி வாங்கியதாகவும், இதற்கு ஐ.சி.சி. அனுபமதி கொடுத்ததாகவும் பிபிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விராட் கோலி ஐ.சி.சி.யின் விதிமுறையை மீறவில்லை என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×