search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணியில் ஷபியுல், ருபெல் சேர்ப்பு
    X

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணியில் ஷபியுல், ருபெல் சேர்ப்பு

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வங்காள தேச அணியில் ஷபியுல், ருபெல் ஹொசைன் இடம்பிடித்துள்ளனர்.
    வங்காள தேச அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

    அதன்பின் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் மொமினுல் ஹக்யூ, லித்தோன் தாஸும், வேகப்பந்து வீச்சாளர்கள் ருபெல் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தமீம் இக்பால், முஸ்டாபிஜூர் ரஹ்மான், மொசாடெக் ஹொசைன் ஆகியோர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. சுபாஷிஸ் ராய், சுன்சாமுல் இஸ்லாம், நுருல் ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கான வங்காளதேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சாஹிப் அல் ஹசன் (கேப்டன்), 2. மொமினுல் ஹக்யூ, 3. சவுமியா சர்கர், 4. இம்ருல் கெய்ஸ், 5. முஷ்டாபிஜூர் ரஹிம், 6. சபீர் ரஹ்மான். 7. மெஹ்முதுல்லா, 8. லித்தோன் தாஸ், 9. நசிர் ஹொசைன், 10. மெஹிதி ஹசன் மிராஸ், 11. ருபெல் ஹொசைன், 12. ஷபியுல் இஸ்லாம், 13. தஸ்கின் அஹ்மது, 14. மொகமது சாய்புதீன்.
    Next Story
    ×