search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்
    X

    குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்: வில்லியம்சன்

    இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலை சமாளிப்பது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் கூறியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் திறமையான வீரர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர்.

    இருவரும் அண்மைகாலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினமான சவால் என்பதை அறிவோம். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறோம். இங்குள்ள சூழலுக்கும், வித்தியாசமான ஆடுகளங்களுக்கும் ஏற்ப அணுகுமுறையை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியமாகும்’ என்றார்.

    நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கூறும் போது, ‘எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சிலர் அவருடன் ஒரே அணியில் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×