search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: பெங்கால் அணிக்கு 10-வது வெற்றி
    X

    புரோ கபடி லீக்: பெங்கால் அணிக்கு 10-வது வெற்றி

    புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியாஸ் அணி 25-19 என்ற புள்ளிக் கணக்கில் புனேயை வீழ்த்தி 10-வது வெற்றியை ருசித்தது.

    ஜெய்ப்பூர்:

    10-வது புரோ கபடி ‘லீக்’ போட்டிகள் ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன.

    11-வது கட்டமாக புரோ கபடி ‘லீக்’ போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது.

    இந்தப் போட்டியில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் குஜராத், அரியானா, மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, புனே ஆகிய அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், பெங்கால், உ.பி.யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணிக்கும் 22 ‘லீக்’ ஆட்டம் இருக்கும். தமிழ் தலைவால் அணி 13 ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்டது.

    ஜெய்ப்பூரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஜெய்ப்பூர் பாந்தர்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி 23-24 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது. ஜெய்ப்பூர் அணி 8-வது தோல்வியே தழுவியது. குஜராத் அணி 12-வது வெற்றியை பெற்று ‘ஏ’ பிரிவில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-புனே அணிகள் மோதின. இதில் பெங்கால் வாரியாஸ் 25-19 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. அந்த அணி பெற்ற 10-வது வெற்றியாகும். இதன் மூலம் பெங்கால் அணி ‘பி’ பிரிவில் 69 புள்ளிகளை பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. புனே அணி 4-வது தோல்வியை தழுவியது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), ஜெய்ப்பூர்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×