search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்து ரோகித் சர்மா உலக சாதனை
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்து ரோகித் சர்மா உலக சாதனை

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்து இந்திய வீரர் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

    1) நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மா 71 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பிற்கு வித்திட்டார். இந்த போட்டியில் 6 சிக்சர் அடித்தது மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் பிரேண்டன் மெக்கலம் 61 சிக்சர் எடுத்து முன்னிலையில் இருந்தார். தற்போது ரோகித் 65 சிக்சர்களுடன் முன்னிலையில் உள்ளார்.

    2) இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் ராகுல் டிராவிட் மற்றும் டோனி கேப்டனாக இருக்கும் போது தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் போட்டியை கைப்பற்றியது.

    3) இந்திய அணி இதுவரை 4 முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடரை கைப்பற்றியுள்ளது. இது 5 வது வெற்றியாகும்.

    4) ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் போட்டியில் இது வரை 8 முறை சதம் அடித்துள்ளார்.

    5) சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோற்பது இது 11 வது முறையாகும்.

    6) ரோகித்சர்மா மிக வேகமாக  42 பந்துகளில் அரைச்சதம் அடித்துள்ளார். இதற்கு முன் இலங்கைக்கு எதிரான தொடரில் 43 பந்துகளில் அரைச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    7) அதிகம் பேரை ஆட்டமிழக்க செய்த கீப்பர் பட்டியலில் டோனி  750 பேரை ஆட்டமிழக்க செய்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×