search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்ட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சால் வெஸ்ட் அணி தனது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. வெஸ்ட் அணி 42 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய கிரிஸ் கெயில் 27 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விகெட்டுகளும், வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதை தொடர்ந்து 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்ஸ்டோ நிதானமாக விளையாடி சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 30.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளும், ஜெரோம் டெய்லர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதைதொடர்ந்து, 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் 21-ம் தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×