search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் லீக்: டெல்லி டான்ஸை வீழ்த்தியது சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ்
    X

    இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் லீக்: டெல்லி டான்ஸை வீழ்த்தியது சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ்

    இந்தியன் கியூ(ஸ்னூக்கர்) மாஸ்டர்ஸ் தொடரின் லீக் போட்டியில் சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ், டெல்லி டான்ஸை அணியிடம் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    இந்தியன் கியூ(ஸ்னூக்கர்) மாஸ்டர்ஸ் லீக்கின் முதல் சீசன் போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்று(20-ம் தேதி), லீக் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.

    நேற்று நடந்த லீக் போட்டியில் டெல்லி டான்ஸை அணி, சென்னை ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் வெவ்வேறு பிரிவு போட்டிகளில் விளையாடின. 16 முறை உலக சாம்பியனான பங்கஜ் அத்வானி சென்னை அணிக்காக விளையாடுகிறார்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கஜ் அத்வானி, டெல்லி அணியில் கெல்லி பிஸ்சரை எதிர்கொண்டார். இப்போட்டியில், பங்கஜ் அத்வானி 32-19, 26-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

    கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டியில் பங்கஜ் அத்வானி - வித்யா பிள்ளை ஜோடி, டெல்லியின் கெல்லி பிஸ்சர் - மனன் சந்திரா ஜோடியை 20-5, 22-18 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    சென்னை அணியின் தர்மேந்தர் லில்லி, மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் டெல்லியின் மல்கீத் சிங்கை விழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், மொத்த புள்ளிகள் அடிப்படையில் 4-1 என சென்னை அணி வென்றது.

    குஜராத் கிங்ஸ் - ஐதராபாத் ஹஸ்டிலர்ஸ் இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    Next Story
    ×