search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி கோஷ்-சத்தியன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
    X

    பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி கோஷ்-சத்தியன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்-ஜி.சத்தியன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    பல்கேரியாவின் பனாகிரிஷ்தே நகரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்-ஜி.சத்தியன் மற்றும் அந்தோணி அமல் ராஜ்-சனில் ஷெட்டி ஜோடிகள் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

    இரு ஜோடிகளும் அரையிறுதியில் இன்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கோஷ்-சத்தியன் ஜோடி 11-3, 12-10, 11-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோஷ்-சத்தியன் ஜோடி, ஜப்பானின் உதா-மகரு யோஷிமுரா ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

    முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனிகா பத்ரா-மவுனா தாஸ் ஜோடி மதில்டா எக்கோம்-ஜார்ஜினா போத்தா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

    ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசு வீரர் தாமஸ் போனன்ஸ்கியிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    Next Story
    ×