search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவிப்பு
    X

    பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவிப்பு

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலைஸ்டர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவித்தது.


    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலைஸ்டர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவித்தது.

    மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து கேப்டன் ரூட் சதம் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. குக் 153 ரன்களுடனும், மலன் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த மலன் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய குக் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 ரன்களில் ரோஸ்டன் சேஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ. ஆனார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் சேஸ் 4 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் விழ்த்தினர்.

    தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரேங் பிரத்வெயிட், ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. கைல் ஹோப் 25 ரன்களுடனும், கைரன் பவல் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


    Next Story
    ×