search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவது கடினம்- டு பிளிசிஸ்
    X

    ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவது கடினம்- டு பிளிசிஸ்

    ஸ்டெயின் காயத்தில் இருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தால், 150 கி.மீ. தூரத்தில் பந்து வீசுவது கடினம் என டு பிளிசிஸ் கூறியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சர்வதேச அளவில் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ஸ்டெயின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்து வருகிறார்.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் குணமடையாததால் இங்கிலாந்து தொடருக்கு தயார் ஆக முடியாது என்று ஸ்டெயின் தெரிவித்திருந்தார். இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா தொடரை 1-3 என இழந்தது.

    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி கேப்டன் டு பிளிசிஸ், அந்நாட்டின் கிரிக்கெட் இதழ் ஒன்று ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய பிறகு அவரால் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவது கடினம் என கூறியுள்ளார்.



    ஸ்டெயின் குறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஸ்டெயின் காயத்தில் இருந்து குணமடைந்து டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, 145 முதல் 150 கி.மீ. வேகத்தில் மீண்டும் பந்து வீசுவது கடினம். ஆனால், அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி அந்த வேகத்தில் வீசுவார் என்று நான் நம்புகிறேன்.

    ஏனென்றால், இங்கிலாந்தில் அவரது அனுபவம் மோர்னே மோர்கல் மற்றும் பிலாண்டர் போன்று சிறப்பாக பந்து வீச சாதகமாக அமைந்திருக்கும். இதுபோன்ற வீரர்களை மாற்ற முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×