search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டோன்மேன், கிரேன் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்ப்பு
    X

    வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் ஸ்டோன்மேன், கிரேன் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்ப்பு

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோன்மேன், கிரேன் ஆகியோர் புதுமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 எனக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியில் அலஸ்டைர் குக் உடன் ஜென்னிங்ஸ் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    ஜென்னிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்டோன்மேன் என்ற புதுமுக தொடக்க பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டாவ்சன் என்ற சுழற்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டு, கிரேன் என்ற புதுமுக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    2002-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ஸ்டாரஸ் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப்பின் அலஸ்டைர் குக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நிலையான தொடக்க வீரர்கள் கிடைக்கவில்லை. ஸ்டோன்மேன் குக் உடன் இணையும் 12-வது வீரராவார்.



    ஆஷஸ் தொடருக்கு முன் சிறந்த தொடக்க வீரரை அடையாளம் காண இங்கிலாந்து முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 17-ந்தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடக்க இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. ஜேம்ஸ் ஆண்டர்சன், 4. ஜோனி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), 5. பிராட், 6. அலஸ்டைர் குக், 7. மாசன் கிரேன், 8. டேவிட் மாலன், 9. ரோலண்ட்-ஜோன்ஸ், 10. பென் ஸ்டோக்ஸ், 11. மார்க் ஸ்டோன்மேன், 12. டாம் வெஸ்லே, 13. கிறிஸ் வோக்ஸ்.
    Next Story
    ×