என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை
    X

    நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை

    நெய்மர் பி.எஸ்.ஜி. அணியில் இணைவார் என்று முன்னாள் பார்சிலோனா வீரரும், தற்போதைய பிஎஸ்ஜி வீரரும் ஆன டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர். இவர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

    பார்சிலோனா அணி தற்போது ப்ரீசீசனில் விளையாடுவதற்காக சீனா சென்றுள்ளது. பார்சிலோனா அணியுடன் நெய்மர் செல்லவில்லை. இது பிஎஸ்ஜி அணியில் இணைவார் என்ற செய்திக்கு வலு சேர்ப்பதுபோல் உள்ளது.

    நெய்மர் பார்சிலோனா அணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு வந்தார். அப்போது அவருடன் இணைந்து விளையாடி வந்தவர் டேனி ஆல்வ்ஸ். கடந்த வருடம் யுவான்டஸ் சென்ற ஆல்வ், தற்போது பிஎஸ்ஜி அணியில் இணைந்துள்ளார்.



    பிஎஸ்ஜி அணியில் லூகாஸ் மவுரோ, தியாகோ சில்வா, மார்க்கியூனோஸ் ஆகியோருடன் நெய்மர் இணைவார் என்று டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இகுறித்து 34 வயதாகும் டேனி ஆல்வ்ஸ் கூறுகையில் ‘‘பிஎஸ்ஜி அணியில் நெய்மர் இணைவார். இது நடக்கும் என நான் நம்புகிறேன். அவருடைய முடிவில் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அவருக்கு இது மிகவும் முக்கியமான முடிவு’’ என்றார்.
    Next Story
    ×