என் மலர்
செய்திகள்

758 கோடி ரூபாய் கொடுத்து கிரிஸ்மானை வாங்க தயாராகும் பார்சிலோனா
நெய்மர் அணியை விட்டு விலகுவதாக கூறி வருவதால் கிரிஸ்மானை 758 கோடி ரூபாய் கொடுத்து வாங்க பார்சிலோனா விரும்புகிறது.
கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராக பிரேசில் நாட்டின் நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேற விரும்புகிறார். கடந்த ஆண்டும் இதுபோன்று வெளியேறுவதாக கூறினார். இறுதியில் பார்சிலோனாவுடன் 2021 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (பி.எஸ்.ஜி.) நெய்மரை வாங்க விரும்புகிறது. அந்த அணி யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிலான சம்பளத்தை நெய்மருக்கு கொடுக்க முன்வந்துள்ளது. அந்த வாய்ப்பை நெய்மர் ஏற்றுக்கொண்டார்.

ஆகவே, எப்போது வேண்டுமென்றாலும் நெய்மர் பிஎஸ்ஜி செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நெய்மர் வெளியேறினால், அவருக்குப் பதிலாக அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கிரிஸ்மானை வாங்க பார்சிலோனா விரும்புகிறது.
இதற்காக அட்லெடிக்கோ மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் பீஸாக 90 மில்லியன் பவுண்டு (758.29 கோடி ரூபாய்) கொடுக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே கிரிஸ்மானை மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்குவதற்கு விரும்பியது. ஆனால், கிரிஸ்மான், அட்லெடிக்கோ மாட்ரிட் அணிக்காகத்தான் தொடர்ந்து விளைாடுவேன் என்று கூறிவிட்டார்.
தற்போது பார்சிலோனா வலைவிரித்துள்ளது.

Next Story