search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்தம் கையெழுத்து ஆகாதது எங்கள் தவறா?: வார்னர் ஆதங்கம்
    X

    ஒப்பந்தம் கையெழுத்து ஆகாதது எங்கள் தவறா?: வார்னர் ஆதங்கம்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையிலான சம்பள பிரச்சினையில், முன்னணி வீரரான வார்னர் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின சம்பள ஒப்பந்தத்தில் சுமார் 234 வீரர்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் புதிய சம்பள ஒப்பந்தத்தை கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலிய வீரர்கள் கிராஸ்ரூட் (கிரிக்கெட்டிற்கான அடிப்படை வசதிகளை உருவாக்குதல்) திட்டத்திற்காக சம்பளத்தில் பெரும் தொகையை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலை உருவானது. இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கெடு விதித்தது. என்றாலும் வீரர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒப்பந்ததம் ரத்து செய்யப்பட்டதால் 234 வீரர்கள் வேலையை இழந்துள்ளனர்.



    இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு டேவிட் வார்னர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘ஆஸ்திரேலிய அணியின் தொப்பிதான் எனக்கு உலகம். நான், அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என எல்லோரும் அணிக்காக விளையாட விரும்புகிறோம். நாங்கள் 30 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் கிராஸ்ரூட்டிற்காக விட்டுக்கொடுக்க முன்வந்தோம்.. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இரண்டு முறை கேட்டோம். அதுவும் நிராகரிக்கப்பட்டது. தற்போது கிரிக்கெட் வாரியம் பிரச்சினை உள்ளதாக கூறுகிறது. வீரர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சில வீரர்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். ஆனால், கிரிக்கெட் பயிற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம் முடிவுக்கு வராததற்கு, எங்கள் தவறு என எப்படி கூற முடியும்?’’ என்று குறிபிட்டுள்ளார்.
    Next Story
    ×