search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி யு.எஸ். ஓபனை வென்றார் எச்.எஸ். பிரணாய்
    X

    பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி யு.எஸ். ஓபனை வென்றார் எச்.எஸ். பிரணாய்

    அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரணாய்.
    அமெரிக்காவின் அனெஹெய்மில் அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் - பருபள்ளி காஷ்யப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    இதில் பிரணாய் 21-15, 22-20, 21-12 என பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். காஷ்யப்பை வீழ்த்த பிரணாய்க்கு 65 நிமிடங்கள் தேவைப்பட்டது.



    வெற்றி பெற்ற பின் பிரணாய் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமெரிக்க ஓபனை வென்றதை சிறந்ததாக உணர்கிறேன். என்னுடைய அகாடமியில் இடம்பிடித்துள்ள பருபள்ளியை வீழ்த்திய போட்டி கடுமையானதாக அமைந்தது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×