என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்
    X

    இந்தியாவை இலங்கையால் வெல்ல முடியும் என்றால், வங்காள தேசத்தாலும் முடியும்- முன்னாள் கேப்டன்

    இலங்கையால் இந்தியாவை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் அஷ்ரபுல் கூறியுள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    நாளை இந்தியா - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியாவிற்கு அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டாலும், வங்காள தேசம் அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

    இந்நிலையில் இலங்கையால் இந்திய அணியை வெல்ல முடியும் என்றால், எங்களாலும் முடியும் என்று வங்காள தேச அணியின் முன்னாள் கேப்டன் மொகமது அஷ்ரபுல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அஷ்ரபுல் கூறுகையில் ‘‘லீக் ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்து 322 ரன்கள் இலக்கை எடுத்து இலங்கை அணியால் வெற்றி பெற முடியும் என்றால், எங்களால் ஏன் முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கும் நான்கு விக்கெட்டை இழந்த நிலையிலும், அதன்பின் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம்.

    இரண்டு அணிகளும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். கார்டிஃப் எங்களுக்கு ராசியான மைதானம். கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் வங்காள தேச அணிக்கு உத்வேகம் கிடைத்தது.

    பவர்பிளே ஆன 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை நாங்கள் வீழ்த்திவிட்டால், அது எங்கள் அணிக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். ருபெல் மற்றும் தஸ்கின் ஆகியோரால் 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச முடியும். அவர்களால் இந்த தொடக்க பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடியும்’’ என்றார்.
    Next Story
    ×